நடனக் குழு மாணவர்களை ஜேர்மனுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்த ஆசிரியை கம்பஹாவில் கைது!

232 0

நடனக் குழுவின் மாணவர்களை ஜேர்மனுக்கு அனுப்புவதாகக் கூறி பெற்றோரிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டில் கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் நடனப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆசிரியைக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தது தொடர்பாக  நான்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சுமார் 50 இலட்சம் ரூபா மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார்  கூறுகின்றனர்.