கல்முனை மாநகர சபையின் 58ஆவது பொதுச்சபை அமர்வு

169 0

ல்முனை மாநகர சபையின் 58ஆவது மாதாந்த பொதுச்சபை அமர்வானது நேற்று புதன்கிழமை (18) மாலை கல்முனை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வு சமய ஆராதனைகளோடு ஆரம்பமானது.

தொடர்ந்து, கடந்த அமர்வின் கூட்டறிக்கையை உறுதிப்படுத்தல், முதல்வரின் உரை, முதல்வரின் ஏனைய அறிவித்தல்கள் என்பன இடம்‍பெற்றன.

அத்தோடு உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டதன் பின்னர் முதல்வரின் ஏனைய அறிவுறுத்தலுடன் கூட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.