மின்னேரியாவில் உள்ள லங்கா சதொச நிலையத்தின் முன்பக்க கண்ணாடி கதவு காட்டு யானையால் உடைக்கப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (ஜன 17) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மின்னேரிய தேசிய பூங்காவில் சுற்றித்திரியும் காட்டு யானை ஒன்று மின்னேரியா நகருக்கும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் அடிக்கடி வந்து செல்லும் நிலையிலேயே சதொச நிலையத்துக்கு இவ்வாறு சேதமேற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் காணரமாக நிலையத்தின் முன்பக்க கண்ணாடிக் கதவு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், சேதம் கணக்கிடப்பட்டு வருவதாகவும் அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

