பஸ் வீதியில் சென்றவர்களை மோதியதில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!

164 0

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த  தனியார்  பஸ் ஒன்றில்  மதுபோதையில்  ஏறிய சிலர்  சாரதியை தாக்க முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  சாரதியால் பஸ்ஸைக்  கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் பயணித்த ஒருவரை  மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

16ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்த பாலதந்திரிகே குசுமலதா (68) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதுடன் 47 வயதுடைய அவரது மகன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும்  மூவரைக் கைது செய்ய  பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.