உடுதும்பர தாக்குதல் சம்பவம் ; மேலும் இருவர் கைது

208 0

கடந்த 8 ஆம் திகதி இரவு உடதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் போது கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பில் இருவர் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது  ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் நால்வர் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உடதும்பர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த சம்பவ த்துடன்  தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் உடதும்பர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29 மற்றும் 35 வயதுடைய  கண்டி நவனதகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

மேலும் ஏற்கனவே குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஜனவரி 9ஆம் திகதி கைது செய்யப்பட்டு தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.