ஓய்வூதியப் பணம் நிதி அமைச்சின் செயலாளரின் அறிவித்தல்!

153 0

இம்மாத ஓய்வூதியப் பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு இன்று (11) விடுவிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கிக்கு பணம் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வூதியத்துக்கான மாதச் செலவு 2,600 கோடி ரூபாய் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.