சிற்றூண்டிச்சாலையின் உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

126 0

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் இன்று வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலையில் காணப்படுகின்ற சிற்றூண்டிச்சாலையில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் சுகாதார மற்ற உணவுப் பொருட்களை வழங்குவதாக தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனால் குறித்த சிற்றூண்டிச்சாலையில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறும் தரமான உணவுப் பொருட்களை வழங்குமாறும் தெரிவித்து சுகாதார ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இது சம்மந்தமாக சுகாதார வைத்தியரிடம் வினவியபோது வடமேல் மாகான சுகாதார அலுவலகத்தினால் குறித்த சிற்றூண்டிச்சாலை மாதத்திற்கு நான்கு இலட்சத்து அறுவத்தையாயிரம் ரூபா அடிப்படையில் குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் இது சம்மந்தமான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.