இரசாயனப் பொருட்கள் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கைக்கான திருத்தங்கள்

145 0

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டப் புள்ளி விபரங்களுக்கமைய, உலகளாவிய ரீதியில் தற்போது 350,000 இரசாயனப் பொருட்கள் சந்தையில் காணப்படுகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிபரங்களுக்கமைய, இரசாயனப் பொருட்களின் வெளிப்படுத்தல்களால் வருடாந்தம் 2 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர்.

அத்துடன், இரசாயனப் பொருட்களைத் தகுந்த வகையில் முகாமைத்துவம் செய்யாமையால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரசாயனப் பொருட்களின் பயன்பாடு சுற்றாடலுக்கும் மனித சுகாதாரத்திற்கும் ஏற்படுத்துகின்ற எதிர்மறை விளைவுகளைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் 21 ஆவது நிகழ்ச்சி நிரலில் ‘நச்சு இரசாயனப் பதார்த்தங்களின் சுற்றாடல் நேயம்மிக்கதான மனித முகாமைத்துவம்’ உலகளாவிய ரீதியில் முன்னுரிமையளித்து கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை கையொப்பமிட்டுள்ள சர்வதேச உடன்படிக்கைக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இரசாயனப் பொருட்களின் முகாமைத்துவம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு, குறித்த பிரதான அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர்களுடன் கலந்துரையாடி தயாரிக்கப்பட்டுள்ள இரசாயனப் பொருட்கள் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.