2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டியில் இருவர் கைது !

174 0

2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன்  இருவரை  கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கற்பிட்டி ஜெட்டி வீதியில் சந்தேகத்துக்கிடமான வகையில்  பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோதே ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 35 மில்லியன் ரூபா   என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் கற்பிட்டி மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களைச் சேர்ந்த 39 மற்றும் 49 வயதுடையவர்களாவர்.  இவர்கள் இருவரும் இன்று (10)புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.