உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியது மொட்டு கட்சி!

156 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இன்று (திங்கட்கிழமை) செலுத்தியுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் கொழும்பு மாவட்ட செயலகத்திற்கு வந்து தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.