நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின்பிறப்பாக்கி இன்று (8) முதல் இயங்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பராமரிப்பு நோக்கத்துக்காக குறித்த மின்பிறப்பாக்கி செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தது. இதனால் தேசிய மின் கட்டமைப்புக்கு 270 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நிலக்கரி ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நேற்று (7) புத்தளத்தை வந்தடைந்ததுடன், இந்த வருடத்தில் இலங்கையை வந்தடைந்த இரண்டாவது நிலக்கரி கப்பல் இதுவாகும்.

