நான் கடலிலேயே இறந்து விடுவேன் என நினைத்தேன்

141 0

இந்தோனேசியாவின்  அசே மாகாணத்தில் உள்ள மீட்பு தங்குமிடத்தில் தனது ஐந்து வயது மகள் உம்மே சலிமாவை கையில் பிடித்தபடி  அழுகின்றார் ஹட்டேமொன் நெசா.

உணவு மற்றும் தண்ணீர் இ;ல்லாத படகில் பல வாரங்கள் கடலில் தத்தளித்த அவர்களின் முகங்கள் மெல்லியதாகவும் கண்கள் வெறுமையானதாகவும் தோற்றமளிக்கின்றன.

எனது தோல்கள் அழுகத்தொடங்கின எனது எலும்புகள் வெளியே தெரியத்தொடங்கின நான் படகிலேயே உயிரிழந்துவிடுவேன் என நினைத்தேன் என்கின்றார் அவர்.”

 

தனது ஏழு வயது மகள் உம்மே ஹபீபாவை பங்களாதேசிலேயே விட்டுவிட்டு வரநேர்ந்தது குறித்தும் அவர் கண்கலங்குகின்றார்- தனதுஇளைய மகளை மலேசியாவிற்கு கொண்டு செல்வதற்காக ஆட்கடத்தல்காரர்கள் கோரிய 1000 அமெரிக்க டொலரை கொடுக்க முடியாததாலேயே தனது இளைய மகளை அங்கேயே விட்டுவிட்டு வரநேர்ந்ததாக  அவர் குறிப்பிடுகின்றார்.

எனது மகளிற்காக எனது இதயம் வலிக்கின்றது என அவர் தெரிவித்தார்.

பங்களாதேசின் கொக்ஸ் பசாரிலிருந்து ஆபத்தான  கடற்பயணத்தை மேற்கொண்ட மியன்மாரின் ஒடுக்குமுறைக்கு உள்ளான 200 முஸ்லீம்ரோகிங்யா சிறுபான்மையினத்தவர்களில் நெசாவும் உம்மே சலிமாவும் உள்ளனர்.

பங்களாதேசின் மிகப்பெரிய கொக்ஸ் பசார் அகதிமுகாமில் ஒரு மில்லியனிற்கும் மேற்;பட்ட மக்கள் வாழ்கின்றனர், இவர்கள் மியன்மாரில் இனப்படுகொலையிலிருந்து  தப்பிவந்தவர்கள்.

அவர்கள் அந்த ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்ட சில மணிநேரங்களில் படகின் இயந்திரங்கள் பழுதடைந்தன,அதன் காரணமாக ஏழுநாள் கடற்பயணம் நடுக்கடல் அவலமாக மாறியது.

மூடப்படாத படகில் அவர்கள் இயற்கையின் அனைத்து வடிவங்களையும் எதிர்கொண்டனர்,மூன்று நாட்களிற்கான உணவு மற்றும் மழைநீரிருடன் அவர்கள் உயிர்தப்பினார்கள்.

நாட்கள் வாரங்களாக படகில் இருந்தவர்களின் குடும்பத்தவர்களும் மனிதாபிமான அமைப்புகளும் உதவுமாறு பல நாடுகளை கேட்டுக்கொண்டன,ஆனால் அவர்களது வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன.

டிசம்பர் 26 ம் திகதி இந்தோனேசியாவின் மீனவர்களும் அசே அதிகாரிகளும் அந்த படகை காப்பாற்றினார்கள்,படகுப்பயணத்தை ஆரம்பித்த 200 பேரில் 174 பேர் மாத்திரமே உயிர் தப்பினார்கள் என யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது – 26 பேரும்  படகில் உயிரிழந்திருக்கவேண்டும் அல்லது கடலில் காணாமல்போயிருக்கவேண்டும்.

கொவிட் காலத்து அமைதிக்கு பின்னர் தற்போது கொவிட்டிற்கு முந்தைய கால நிலை தென்படுகின்றது கொவிட்டிற்கு முந்தைய காலத்தில் பயணித்தது போல அதிகளவானவர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர் என்கின்றார் யுஎன்எச்சிஆரின் ஆசியாவிற்கான பேச்சாளர் பாபர் பலோச்.

கடந்த வருடம் மாத்திரம் கடல்பயணத்திற்கு உகந்ததாக காணப்படாத படகுகளில் 2500க்கும் அதிகமானவர்கள் பயணித்துள்ளனர் -400 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக 2022 ம் ஆண்டு கொக்ஸ் பசாரிலிருந்து தப்ப முயலும் ரோகிங்யா அகதிகளிற்கு மிக மோசமான ஆண்டாக மாறியுள்ளது.

அவை மரணப்பொறிகள் நீங்கள் உள்ளே சிக்குண்டதும் நீங்கள் உயிரை இழப்பது நிச்சயம் என்கின்றார்  பாபர் பலோச்.

நாங்கள் பட்டினி கிடக்கின்றோம் நாங்கள் இங்கு உயிரிழக்கின்றோம்.

 

சனநெரிசல் மிக்க கொக்ஸ் பசார் அகதி முகாமிலிருந்து நவம்பர் 25 ம் திகதி நெசாவும் சலிமாவும் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.

அங்கு தனது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாததால் அவர்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்ற நிலை காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தனது கடல்பயணத்திற்காக இரண்டு கிலோ அரிசியை கொண்டுவந்ததாக நெசா தெரிவித்தார்.

ஆனால் படகு புறப்பட்டு சில மணிநேரங்களில் அதன் இயந்திரம் பழுதடைந்தது.அவர்கள் கடலில் தத்தளிக்க தொடங்கினார்கள்.

உண்பதற்கு உணவு இல்லாத நிலையில் நாங்கள் மீன்பிடி படகுகளை பார்த்து அருகில் செல்ல முயன்றோம், என அவர் தெரிவித்தார், அச்சத்துடன் அவர் கதறினார்,நாங்கள் அந்த படகிற்கு அருகில் செல்வதற்காக கடலில் குதித்துநீந்த முயன்றோம் அது முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

டிசம்பரில் படகு வங்களா விரிகுடாவில் இலக்கின்றி தத்தளித்தது,இலங்கை இந்தியாவிற்கு அருகில் படகு காணப்பட்டது என ஐநா அமைப்பு தெரிவிக்கின்றது.

எனினும் தலையிடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை அந்த நாடுகள் தொடர்ந்தும் புறக்கணித்தன என யுஎன்எச்சீ ஆர் தெரிவித்தது.

இலங்கை இந்திய கடற்படையினரின் கருத்துக்களை பெறுவதற்கு சிஎன்என் முயன்ற போதிலும் அது சாத்தியமாகவில்லை.

இதேவேளை 104 ரோகிங்யா அகதிகளுடன் தத்தளித்த படகை காப்பாற்றுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

இதேவேளை பங்களாதேஸ் அகதிமுகாமிலுள்ள நெசாவின் சகோதரர் நெசாவின் படகில் இருந்த ஒருவர் அனுப்பிய மனதை வருத்தும் வீடியோவை பகிர்ந்துகொண்டார்.

நாங்கள் இங்கு செத்துக்கொண்டிருக்கின்றோம்,என அவர் தெரிவித்துள்ளார்.பத்து நாட்களாக நாங்கள் எதனையும் உண்ணவில்லை நாங்கள் பட்டினி கிடக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உணவிற்காக  படகை செலுத்தியவரும் இன்னொரு நபரும் கடலிற்குள் குதித்தனர் அவர்கள் திரும்பி வரவில்லை – மீன்களிற்கு இரையாகியிருக்கவேண்டும் என நெசா தெரிவி;த்தார்.

மேலும் 12 பேர் கயிறுபோன்ற ஒன்றை பிடித்தபடி கடலிற்குள் உணவு தேடி இறங்கினார்கள் ஆனால் கயிறு அறுந்தது- அவர்களால் திரும்பி வரமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

c.n.n