கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ். இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரான இவர் பெங்களூருவில் ‘கடபோம்ஸ் கென்னல்ஸ்’ என்ற நாய் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ரூ.20 கோடி கொடுத்து ‘காகேசியன் ஷெப்பர்டு’ இன நாயை சதீஷ் வாங்கி உள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த தனது நண்பரிடம் இருந்து சதீஷ் இந்த நாயை வாங்கி உள்ளார்.
அந்த நாய்க்கு தற்போது 1½ வயது தான் ஆகிறது. நாய்க்கு ‘கடபோம் ஹைடர்’ என்றும் சதீஷ் பெயர் சூட்டி உள்ளார். இந்த நாய் பெரும்பாலும் ரஷியா, துருக்கி, சிர்கசியா, ஜார்ஜியா ஆகிய வெளிநாடுகளில் தான் காணப்படும். இந்தியாவில் இந்த இன நாய்களை காண்பது மிகவும் அரிதானது.
சதீஷ் ஏற்கனவே ‘திபெத்தியன் மஸ்டிப்’ இன அரிய வகை நாயை ரூ.10 கோடிக்கும், ‘அலஸ்கன் மலமுடே’ இன அரிய வகை நாயை ரூ.8 கோடிக்கும் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

