மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான காணிக் கையுதிர்த்தலுக்கான அதிகாரம் இலங்கை மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளைக் கையுதிர்ப்பதற்கான அதிகாரம் குறித்த ஆணைக்குழுவுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குரிய நோக்கங்கள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளமையால், குறித்த இரண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த அரச காணிகளைக் கையுதிர்த்தல் தொடர்பான அனைத்து அடிப்படைச் செயற்பாடுகளும் பிரதேச செயலாளர்கள் ஊடாக மாத்திரம் மேற்கொள்வதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.
அதற்கமைய, அரச காணிகளைக் கையுதிர்த்தல் தொடர்பாக தற்போது காணப்படுகின்ற அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை ஆராய்ந்து, அறிமுகப்படுத்த வேண்டிய புதிய சட்ட ரீதியான திருத்தங்கள் உள்ளடங்கலாக, அரச காணிகளை கையுதிர்த்தல் தொடர்பான கொள்கையை வகுப்பதற்கும், மற்றும் தேவையான வழிகாட்டல்களைத் தயாரித்து சமர்ப்பிப்பதற்கும் ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

