2023 இல் இலங்கை உலகநாடுகளிடம் கையேந்தக்கூடாது – கர்தினால் மல்கம் ரஞ்சித்

174 0

2023 இல் இலங்கை உலகநாடுகளிடம் சென்று கையேந்தும் நிலை காணப்படக்கூடாது மாறாக நாட்டை கட்டியெழுப்புவதற்கான புதிய கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தில் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான புதிய கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவேண்டும்,நாங்கள் உலகமுழுவதும் சென்று கையேந்துவதை நிறுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதனை செய்யாவிட்டால் நாட்டை இழக்கவேண்டிவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.