மாடு மேய்க்க சென்ற நபர் ஒருவர் நீரேரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கொடிகாமம், கெற்பேலியை சேர்ந்த ராயு (வயது 60) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் இருந்து, மாடுகளை மேச்சலுக்காக வியாழக்கிழமை (டிச.29) காலை அழைத்து சென்ற நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி சென்ற வேளை வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள நீரேரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

