நிந்தவூரில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற ஜீப் வண்டி

148 0

நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் புதன்கிழமை (டிச 28)  காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன் தப்பி சென்ற ஜீப் வண்டி தொடர்பில் மக்களின் ஒத்துழைப்பினை பொலிஸார் கோரியுள்ளனர்.

சம்பவ தினமன்று நிந்தவூர் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றினையும்  மோதிய  ஜீப் வண்டி அவ்விடத்தில் இருந்து  தப்பி சென்றிருந்தது.

எனினும் குறித்த ஜீப் வண்டியை கண்டுபிடிப்பதற்காக அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காணொளிகளை  பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.