13 மாடுகளைத் திருடிய ‘மாட்டிறைச்சி திருடர்கள்’

173 0

கிழக்கு மாகாணத்தில் உள்ள பண்ணைகளுக்கு அனுப்புவதற்காக வஸ்கடுவ வாடியாவத்த விளையாட்டு மைதானத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கட்டாக்காலி மாடுகளில் 13 மாடுகள் காணாமல்போயுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை மற்றும் பாணந்துறை பிரதேசங்களில் காணப்படும் கட்டாக்காலி மாடுகளால் ரயில் பாதையிலும் காலி வீதியிலும் அண்மைய நாட்களாக அதிகளவில் விபத்துக்கள்  ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இவ்வாறான கட்டாக்காலி மாடுகள்  அப்பகுதியின் உள்ளூராட்சி அதிகாரிகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள பண்ணைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வாறு வஸ்கடுவ வாடியாவத்த விளையாட்டு மைதானத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த மாடுகளில் 13 மாடுகள் இறைச்சிக்காக கால்நடைகளை திருடும் குழுவினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

களுத்துறை உள்ளூராட்சி சபையின் பணியாளர்கள்  மாடுகளை  கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.