சென்னை விமான நிலையத்தில் பாம்புகள், குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த இரண்டு பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்கள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை சோதனை செய்தபோது, தாய்லாந்து நாட்டு வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை 40 மலைப்பாம்பு குட்டிகள், 13 நாகப் பாம்பு குட்டிகள், 5 குரங்கு குட்டிகள் இருந்தன. வனவிலங்குகள் குற்றப்பிரிவு துறையினர் வந்து ஆய்வு செய்ததில், நாகப்பாம்புகள் கொடிய விஷம் உடையவை என தெரிவித்தனர்.
பாம்பு, குரங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

