சமூகத்திலுள்ள அசட்டையீனத்தால் தான் போதைப்பயன்பாடு அதிகரித்துள்ளது – யாழ். மறைக்கோட்ட முதல்வர்

172 0

சமூகத்தில்  காணப்பட்ட அசட்டையீனத்தால்தான் போதை பயன்பாடு அதிகரித்துள்ளது எனவே சமூகத்தவர்களே இதனை இல்லாது செய்வதற்கு முயற்சிகளை எடுக்கவேண்டும் என யாழ்ப்பாண  மறைகோட்ட முதல்வர் அருட்பணி ஜோண் மெளளிஸ் அடிகளார் தெரிவித்தார்.

குறித்தவிடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைபொருள் பயன்பாடு அதிகரித்து கொண்டு செல்கிறது தடுப்பதற்கு  பல முயற்சிகள் மேற்கொண்டுவந்தாலும் பயன்பாடும் அதிகரித்து செல்கிறது.

போதைபொருள் பயன்பாட்டினால்  தீமைகள் பல காணப்படுகிறது.  ஒருவனுடைய மனக்கோளாறு, ,உழவியல் பாதிப்பு, வீட்டில் உள்ளவர்களுடன் பாகுபாடு ஏற்படுகிறது.

சமூக விழுமியங்கள், ஒழுக்க கலாச்சாரா பண்பாட்டு விழுமியங்கள் மாற்றியமைக்கப்பட்டுவருகிறது.சமூக ஆர்வலர்கள் மத்தியில் இதனை தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் அதிகளவான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்களை உள்வாங்க வேண்டும். சமூக சமய ரீதியாகவும் பல விழிப்புணர்வுகளை ஏற்கடுத்தவேண்டும். போதைப்பயன் பாட்டிற்குள் ஆழானவர்களை எப்படி கையாளவது என்பதிலும் கூடியகவனம் செலுத்த வேண்டும்.

இதை  தவிர்த்து அவர்களை ஒதுக்குவது ,அவ்களின் குடுப்பத்தை ஓதுக்குவது இயலாதகாரியம். அவர்களும் எங்களுடைய ஒர் அங்கமே. சமுகத்தில் இருப்பவர்களது அசட்டையீனத்தால்தான் அவர்களும் இத்தகைய நிலைக்குள் ஆளாகியுள்ளார்கள்.

ஆகவே அவர்களை ஒதுக்காது அவர்களை அரவணைத்து நல்வழிபடுத்தவேண்டும். இதயசுத்தியுடன் செயற்படவேண்டும்.

போதைக்கு அடிமைப்பட்டவர்களை சிறைச்சாலைகளில் தடுத்துவைப்பது நல்லதல்ல இவர்களுக்கென பல புனர்வாழ்வு மையங்களை உருவாக்கி அங்கு அவர்களுக்கான புனர்வாழ்வு வழங்கி தொழில்  முயற்சிகளையும் உருவாக்கவேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம்தான் அவர்களை மீண்டும் போதைக்கு அடிமையாகாது பாதுகாத்து கொள்ளவேண்டும்.

போதைப்பொருள் வியாபாரத்தில்  ஈடுபடுபவர்கள் அற்பசொற்ப பணத்திற்காக,சலுகைக்காக  வியாபாரத்தில் ஈடுபடுவதை முற்றாக நிறுத்த வேண்டும் .

நீங்கள் இத்தகைய வியாபாரத்தை செய்வதால் உங்களை ஒரு சமூகமே தூற்றுகின்ற நிலை உருவாகின்றது. இதன் பாதிப்புக்களை உணர்ந்து இந்த வியாபாரத்தை கைவிட வேண்டும் அரசதரப்பு மற்றும் படைத்தரப்பு இந்த விடயத்தில் கூடிய கவனமெடுத்து தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என்றார்.