கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் துப்பாக்கி தோட்டா!

108 0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு முனையத்தின் ஆண்கள் கழிவறையில் காணப்பட்ட 9 மில்லிமீற்றர் துப்பாக்கி தோட்டா ஒன்றை விமான நிலைய காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர், விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் தோட்டா கிடந்ததைக் கண்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து, அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று தோட்டாவை கைப்பற்றிய அதேவேளை மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.