நாயை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசி;ங்கவிற்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்யப்போவதாக இலங்கையை சேர்ந்த விலங்குகள் உரிமை அமைப்பான ரார்Rally for Animal Rights &Environment தெரிவித்துள்ளது.
ரார் அமைப்பு இது தொடர்பில் தனது முகநூலில் தெரிவித்துள்ளதாவது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அசு மாரசிங்க – இவர்களே நாட்டை எப்படி நிர்வகிக்கவேண்டும் என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குபவர்கள்.
பதவி விலகம் மாத்திரம் போதுமானதல்ல
விலங்குகளுடன் உறவுகொள்வது இலங்கையில் குற்றம்,இலங்கையின் விலங்குகளிற்கு எதிராக ஈவிரக்கமற்ற செயற்பாடு சட்டத்தின் கீழ் இதற்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கலாம்.
இந்த நபர் விலங்குகளிற்கு மாத்திரமல்ல சிறுவர்களிற்கும் ஆபத்தானவர்.இவர் சுதந்திரமான நடமாட அனுமதிக்க கூடாது.
எதிர்வரும் நாட்களில் நாங்கள் பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்வோம்.

