வாதுவையில் நூல் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

164 0

வாதுவை, மொரந்துடுவ வீதியில் மலகம பிரதேசத்தில் உள்ள நூல் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக பெருந்தொகையான மின்சாதனங்கள் மற்றும் கம்பிகள் முற்றிலும் சேதமடைந்தன.

களுத்துறை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டதுடன், பிரதேசவாசிகளும் வாதுவை பொலிஸாரும் இணைந்து தீயை அணைத்தனர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஒரு கோடி ரூபாவிற்கு மேல் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.