நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு

158 0

நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (டிச 25) மூடப்படும். நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் சுற்றுலாத்துறைசார் சேவைகளை வழங்குகின்ற ஹோட்டல்கள் , உணவகங்கள் மற்றும் விடுதிகளில் மாத்திரம் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு முரணாக சட்ட விரோமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்குக எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.