டொனால்ட் ட்ரம்பின் நடவக்கைக்கு மெக்ஸிகோ கண்டனம்

256 0

சட்டவிரோத குடியேறிகளை விரைவாக வெளியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள நடவக்கைக்கு மெக்ஸிகோ கண்டனம் வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக வெளியேற்றுவதற்கான புதிய விதிமுறைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பாதுகாப்பு தரப்பினருக்கு விடுத்துள்ளது.

இதன்படி ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளை விரைவாக நாடுகடத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக அவர்களை விரைவாக நாடுகடத்த முடியும் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்காவில் சுமார் 11 மில்லியன் சட்டவிரோத குடியேறிகள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் குறி;த்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மெக்ஸிகோ வெளிவிவகார அமைச்சர் லூயிஸ் விடேகரே தெரிவித்துள்ளார்.