லெபனானில் விழிப்புணர்வை ஏற்படுத்த, மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் போத்தல்களில் கிறிஸ்மஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைப் பரப்பவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நன்கொடையாக பெறப்பட்ட ஒரு இலட்சத்து பத்தாயிரம் பச்சை நிற பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் இரண்டாயிரம் வெள்ளை நிற போத்தல்கள் மூலம், இந்த கிறிஸ்மஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை வடிவமைக்க ஒரு மாத காலம் ஆனதாக கூறப்படுகிறது. நாம் வாழும் பூமியை சேதப்படுத்தினால், வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என வடிவமைத்தவர்கள் தெரிவித்தனர்.

