கலைக்களம்-முன்சன் 09.07.2016

465 0

K800_DSC_0511முன்சன்-தமிழர் பண்பாட்டுக் கழகம் நடாத்திய கலைக்களம் 3வது தடவையாக 09.07.2016 அன்று நடைபெற்றது மாலை 16:00 மணியளவில் கழகக்கொடியேற்றலுடன்,பொதுச்சுடரினை நடுவர்கள் ஏற்றிவைக்க அகவணக்கததுடன் நடுவர்களுக்கான மதிப்பளிப்புடன் வரவேற்பு நடனத்துடன வரவேற்புரையும் தொடர்ந்தது.

இவ் விழாவிற்க்கு சிறப்பு நடுவர்களாக வந்திருந்த மூவர்களும் நுண்கலை பட்டதாரியும், கவின் கலையியல் நிறைஞர் விரிவுரையாளர் ஊரகப்பேரொளி எனும் விருதினைப் பெற்றவர் பிரான்ஸ் நாட்டில் நடன ஆசிரியையுமான
திருமதி.மோகனரூபி தில்லைரூபன்> எமுது நுண்கலை பட்டதாரியும் கவின் எகலையியல் நிறைஞர், மோகினி நடன டிப்ளோமா பெற்றவர் பிரான்ஸ் நாட்டில் நடனம் கற்பிக்கும் ஆசிரியையுமான திருமதி.துர்க்கா விக்னேஸ்வரன், பரத கலா புற பூர்னா இநதியா பங்களுர் 2001ம் ஆண்டிலிருந்து பிரானஸ் புளோமினில் நிருத்திய தர்பனா பாடசாலையிலும் 2006ம் ஆண்டிலிருந்து புளோமினில் தமிழ்சோலை பாடசாலையிலும் 2011ம் ஆண்டிலிருந்து புளோமினில் அரசாங்க பாடசாலைகளிலும் நடன ஆசிரியராக பணியாற்றும் திருமதி. ரெமின்ரா Nஐhர்ஐ;

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் தென் மாநிலப் பொறுப்பாளார் திரு கனகையா சிறிகாந்தன் நால்வரையும் வரவேற்றோம்
நடுவர்கள் தமது பணியைத் திறமையாகச் செய்திருந்தனர் அவர்ளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
தமிழர் கலை கலாச்சாரம் பண்பாடு மேலும் வளம்பெறவும் மொழிப்பற்றை வளர்க்கவும் தமிழரின் அடையாளங்களை மறவாமல் வாழவும் இந்நிகழ்ச்சிகள் மென்மேழும் உதவுகின்ற வகையில் தமிழர் பண்பாட்டுக்கழகம் இந்நிகழ்வுகளை அக்கறையோடு செயலாற்றி வருகின்றது.

பொது அறிவு,யேர்மன் மொழியில் கணக்கு, கட்டுரை விநோத உடை தனித்திறமை தனிப்பாடல் தாயக, திரையிசை நடனங்கள் பரதநாட்டியத்தில் சில உருப்படிகள் பங்கு பற்றிய பிள்ளைகள் யாவரரும்
தங்களது திறமைகளை மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தினார்கள்.

சிறப்பு விருந்தினர் அவர்களுக்கான பரிசளிப்பும் மதிப்பளிப்பையும் செய்ய விழா நிறைவடைந்தது எல்லா மக்களின் மனதினில் மகிழ்ச்சி பொங்க கலைக்களம் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
தமிழர் பண்பாட்டுக் கழகம்-முன்சன்

K800_DSC_0010 K800_DSC_0012 K800_DSC_0027 K800_DSC_0035 K800_DSC_0047 K800_DSC_0371 K800_DSC_0390 K800_DSC_0474 K800_DSC_0495 K800_DSC_0511 K800_DSC_0517 K800_DSC_0527 K800_DSC_0531 K800_DSC_0555