சுகாதார பரிசோதகரை தாக்கிய இராணுவ வீரர் !

187 0

பொல்பித்திகம நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பொது இடத்தில் புகைபிடித்தபோது அறிவுரை வழங்கிய சுகாதார பரிசோதகரை தாக்கி அவரது கடமைக்கு இடையூறு விளைவித்தார் எனக் கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான  இராணுவ வீரர் (20) யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் உள்ள முகாமில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நேற்று (21) பொல்பதிகம நகரில் உள்ள ஹோட்டல்களை சோதனையிட்ட போது, ஹோட்டல் ஒன்றில் குறித்த இராணுவ சிப்பாய் புகை பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.