நத்தார் பண்டிகையை முன்னிட்டு பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு எட்டு மேலதிக புகையிரத சேவைகள் வெள்ளிக்கிழமை (23) முதல் அமுல்படுத்தப்படும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி வெள்ளிக்கிழமை காலை 07.20 மணிக்கு மேலதிகமாக ஒரு புகையிரதம் செல்லவுள்ளதுடன், சனிக்கிழமை இரவு 07.10 மணிக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (26) இரவு 07.10 மணிக்கும் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி விசேட புகையிரத சேவை முன்னெடுக்கப்படும்.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி சனிக்கிழமை காலை 07.30 மணிக்கு,அதே தினம் இரவு 07.30 மணிக்கு,எதிர்வரும் 27ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) இரவு 07.30 மணிக்கு புகையிர சேவை இடம் பெறும்.
வெள்ளிக்கிழமை காலை 09.20 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி மேலதிகமாக ஒரு புகையிரதம் சேவையில் ஈடுப்படுத்தப்படும்.
எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 04 மணிக்கு இந்த புகையிரம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும்.

