பருத்தித்துறை நகர சபை புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும் என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை நகர சபை தவிசாளர் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ள நிலையில்யிலே புதிய நகர சபை தவிசாளர் தெரிவு செய்யவுள்ளார்.
புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகும் என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.புதிதாகத் தெரிவு செய்யப்படும் தவிசாளர் எதிர்வரும் 30ஆம் திகதியளவில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் வகையில் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

