வவுனியாவில் 17 வயது சிறுமி சடலமாக மீட்பு

160 0

வவுனியா – ஓமந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (20.12.2022) பதிவாகியுள்ளது.

வவுனியா – ஓமந்தை பகுதியை சேர்ந்த த.மதுசாலினி (வயது 17) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி நேற்றிரவு வீட்டாருடன் நித்திரைக்கு சென்ற நிலையில் இன்று காலை அருகிலிருந்த அறையில் தூக்கிலிடப்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.