அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரின் சீன விஜயம்

200 0

அவுஸ்திரேலியா அமெரிக்காவால் அழைக்கழிக்கப்படுவதை தவிர்க்கவேண்டும் வாய்மொழி மூலமாகவும் செயற்பாடுகளின் மூலமும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவேண்டும் எனவும்  சீன ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரின் சீன விஜயத்திற்கு முன்னதாக இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.

சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கை என அவுஸ்திரேலியா வர்ணிக்கும் செயற்பாடுகள் குறித்து சீனா என்ன எதிர்பார்க்கின்றது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் இரண்டு சீன ஊடகங்கள் ஆசிரியதலையங்கங்களை  தீட்டியுள்ளன.

 

அவுஸ்திரேலியாவின் அன்டனி அல்பெனிஸ் அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து குளோபல் டைம்ஸ் சாதகமான உணர்வை வெளியிட்டுள்ளது.

குளோபல் டைம்ஸ் சீனதேசியத்தை பிரதிபலிப்பது என்ற கருத்து காணப்படுகின்றது மேலும் கடந்த சில வருடங்களாக அவுஸ்திரேலியாவை இந்த நாளிதழ் கடுமையாக விமர்சித்து வந்துள்ளது.

இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு உறைநிலையிலிருந்து மாறத்தொடங்கியுள்ளது என குளோபல் டைம்ஸ்  எழுதியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் முன்னைய இரண்டு அரசாங்கங்களின் தீவிரமான குறுகிய பிழையான மற்றும் முட்டாள்தனமான சீனக்கொள்கையை குளோபல் டைம்ஸ் கண்டித்துள்ளது.

அமெரிக்காவின் ஆசிய பசுபிக் சதுரங்கப்பலகையில் சீனாவை நோக்கிய மிகவும் ஆக்ரோசமான சிப்பாயாக பணியாற்றுவதற்கான அவுஸ்திரேலியாவின்  விருப்பமே சீனாவுடன் உறவுகள் பாதிக்கப்படுவதற்கான காரணம் என  குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகள் இந்த நெருக்கடியிலிருந்து விடுபடும் மாற்றமடையும் என தெரிவித்துள்ள குளோபல் டைம்ஸ் எனினும் காத்திருக்கும் சவால்கள் குறித்தும் எச்சரித்துள்ளது.

சீனாவின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்த  விசாரணைகளை அரசியல்மயப்படுத்துவதை  தவிர்க்கவேண்டும் என குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை பரஸ்பர மரியாதையும் நேர்மையும் இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை சீர்செய்யலாம் என சீனாவின் சைனா டெய்லி தெரிவித்துள்ளது.

சீனாவுடன் உறவுகளை ஸ்திரப்படுத்தும் அன்டனி அல்பெனிஸ் அரசாங்கத்தின் செயற்பாடுகளை யதார்த்தபூர்வமான அணுகுமுறை என வர்ணித்துள்ள சைனா டெய்லி இந்த உறவுமுறையின் கீழ் நாங்கள் ஒத்துழைக்கவேண்டிய விடயங்களில் ஒத்துழைக்கலாம் தேசிய நலன்களிற்காக முரண்படவேண்டிய விடயங்களில் முரண்படலாம் எனவும் சைனா டெய்லி தெரிவித்துள்ளது.