பொரளை மயானம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு சி.சி. ரி.வி, கெமரா கட்டமைப்பை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுக்கு கொழும்பு மாநகர மேயர் ராேஸி சேனாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
பொரளை மயான பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
என்றாலும் அவரின் கொலை தொடர்பில் சி.சி.ரி.வி காணொளி எதனையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்தே மேயர் ராேஸி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொரளை மயான சுற்றுப்பிரதேசத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தபோதும் இதுவரை அந்த பிரதேசத்தில் பாதுகாப்பு கெமரா கட்டமைப்பு எதுவும் நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

