கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

175 0

களுத்துறை பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

களுத்தறை தெற்கு பஸ் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது உயிரிழந்தவர் 30 வயதுடைய களுத்தறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என்றும் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நாகொட வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் களுத்தறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.