
கோறளைப்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தை அனீஸ் ஹாஜியார் பவுன்டேஷன் முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஆரம்ப கட்டமாக, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 11 குடும்பங்களுக்கு இணைப்புகான பணம் செலுத்தப்பட்ட பற்றச்சீட்டு வழங்கும் நிகழ்வு பாலைநகர் றஹ்மானியா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
பள்ளிவாயல் செயலாளர் ஏ.யூ.அசனார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக அனீஸ் ஹாஜியார் பவுன்டேஷனின் திட்ட இணைப்பாளர் ஆர்.எம் புஹாரி, ஓட்டமாவடி பிரதேச சபையின் தியாவட்டவான் வட்டாரத்துக்கான உறுப்பினர் ஏ.ஜி அஸீஸூல் றஹீம், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம் அன்வர் சதாத், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.எம் நியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

