பெண்கள் உரிமை தொடர்பாக விழிப்புணர்வு வீதி நாடகம்

191 0

பெண்கள் உரிமை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி  நாடகம்  திருகோணமலை நகர் பகுதியில் நேற்று (15) இடம்பெற்றது.

இந்த வீதி நாடகத்தை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, பெண்கள் உடலியல், உளவியல் ரீதியாக எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள், பெண்கள் எவ்வாறான சாதனைகளை புரிந்துள்ளார்கள், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது எவ்வாறு என்பன உள்ளிட்ட பல விழிப்புணர்வு விடயங்கள் இவ்வீதி நாடகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.