இரகசிய கூட்டணியமைக்கும் மைத்திரி

150 0

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய வேலைத்திட்டங்கள் எம்மால் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய கூட்டணியையும் அமைத்துள்ளோம்.

எம்முடன் இணைந்துள்ளவர் யார் என்பது குறித்து ஜனவரியில் பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் ஸ்ரீ மகாபோதி விகாரையில் புதன்கிழமை (14) மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.