அடையாள அணிவகுப்புக்காக கெஸ்பேவ நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த ‘சுட்டியா’, மற்றும் ‘சுடியா’ ஆகிய இரு கொள்ளையர்கள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள்போன்று வேடமணிந்து பிலியந்தலை நகரில் உள்ள லொத்தர் விற்பனை நிலையம் ஒன்றில் 7,000 ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உட்பட பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்திலேயே இவர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்புக்கு ஆஜர்படுத்துவதற்காக கெஸ்பேவ நீதிமன்றப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலைய அறையொன்றில் தடுத்து வைத்திருந்தபோதே அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

