சமூக, சுற்றுச்சூழல், நிதி முடிவுகளின் அடிமட்ட அளவீடுகளில் கவனம் செலுத்த வேண்டும்

161 0

அனைத்து இலங்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இலாபத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், நாடு மிகவும் கடினமான பொருளாதார சூழலை அனுபவித்தாலும், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நிதி முடிவுகளின் மூன்று அடிமட்ட அளவீடுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என முதல் பெண் ரோட்டரி உலக தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் அழைப்பு விடுத்தார்.

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கொழும்பு பங்குச் சந்தையில் உயர்மட்ட நிறுவனங்களுக்கு உரையாற்றிய ஜோன்ஸ்,

“சுற்றுச்சூழல் நிலைபேறான தன்மையுடன் ஆரம்பிப்போம், ரோட்டரி ஸ்ரீலங்கா முன்னெடுத்துள்ள சவாலான ஒரு மில்லியன் மர நடுகைத் திட்டத்தை நான் பாராட்டுகிறேன்.

முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில் பங்குச் சந்தை தொடக்க விழாக்களின் பாரம்பரியத்திற்கு ஏற்ப, சந்தையில் ஜெனிபர் ஜோன்ஸ் தொடக்க மணியை அடித்தார்.

கொழும்பு பங்குச் சந்தையின்  தலைவர் தில்ஷான் வீரசேகர, இந்த புதிய முயற்சியில் ரோட்டரி நிறுவனத்தை பங்குதாரராக இணைத்து அதன் மூலம் நாட்டை சுற்றுச்சூழல் பேரழிவுகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்பதை உறுதி செய்யுமாறு பெருநிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு மில்லியன் மரங்களை நடும் திட்டத்தின்  தலைவி கௌரி ராஜன் நுவரெலியா மாவட்டத்தில் தனி ஒரு பகுதியில் மரங்களை நட்டு, அவை துறையில் வல்லுனர்களால் கவனமாக வளர்க்கப்பட்டு, ஆண்டுதோறும் கணக்கு தணிக்கை  செய்யப்படுகின்றது.   இதனாலே ரோட்டரி ஒரு மில்லியன் மரத் திட்டம் ஒரு தனித்துவமான திட்டமாகும்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் பிடித்தமான மரம் இருக்கும் , உங்களுக்கு பிடித்த மரம் பற்றிய கதையை நாங்கள் அறிய விரும்புகிறோம் என்றும் அவர் கூறினார்.

 

ரோட்டரி ஸ்ரீலங்காவின் சேவையை விளக்கும் வகையில் மாவட்ட ஆளுநர் புபுது டி சொய்சா, இலங்கையில் அனைத்து சமூகத்தினரின் நலனுக்காக இருநூறு பில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ரோட்டரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இடம் பெற்றுள்ளது. ரோட்டரி, இது கல்வி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் மிகப்பெரிய அரசு சாரா அறக்கட்டளையாகும்.