கொள்ளுப்பிட்டியில் கடந்த 10 ஆம் திகதி விபத்துக்குள்ளான காரில் பயணித்த பெண்ணொருவரை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரான பெண் நேற்று புதன்கிழமை (டிச. 14) மாலை பாணந்துறை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர், இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் குறித்த காரில் பயணம் செய்த பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய முக்கிய சந்தேக நபர் என பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.

