குத்துச்சண்டையில் இலங்கையை பிரபலப்படுத்திய குத்துச்சண்டை வீரர் எம். எஸ். தினுஷ லக்க்ஷான் என்ற வீரர் கண்டியில் வைத்து குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, வெட்டப்பட்டு, கண்டி பிரதேசத்திலுள்ள மைதானம் ஒன்றுக்கு அருகில் கைவிடப்பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டி, வைத்தியசாலை வீதியில் உள்ள தனது வீட்டில் மகன் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் வைத்தியசாலை லேன் சந்திக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு காணப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகளில் வந்த குழுவொன்று அவரைக் கடத்திச் சென்று தாக்கியதாகவும் தினுஷ லக்க்ஷானின் தாயார் தெரிவித்துள்ளார். மகனின் கையடக்கத் தொலைபேசி செயலிழந்து காணப்பட்ட நிலையில் அவரது உறவினர்களும் நண்பர்களும், தனது மகன் தாக்கப்பட்டு, வெட்டப்பட்டு, ஹந்தான பகுதியில் உள்ள மைதான பகுதியில் கைவிடப்பட்டுள்ளதகை கண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர் உடனடியாக கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

