பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த ஆண்டு (2022) அனுமதித்துள்ள மேலதிக கொடுப்பனவை (போனஸ்) இரத்துச் செய்வதற்கு இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இணங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்களும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

