நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு: பிரதமருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் கடிதம்

252 0

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. டி.கே.ரங்கராஜன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், மருத்துவப்பட்ட மேல் படிபபுகளில் சேர்வதற்கு தேசியத் தகுதிகாண நுழைவுத் தேர்வு (நீட்) முறையை 2016-17 கல்வி யாண்டு முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. எனினும், நிகழ் கல்வியாண்டில் மட்டும் அத்தேர்வு முறையில் இருந்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது.
இந்நிலையில், “நீட்’ தேர்வு முறையில் இருந்து தமி ழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும் “தமிழ்நாடு எம்பிபிஎஸ், பல் மருத்துவப் படிப்புகள் சேர்க்கை சட்ட மசோதா, தமிழ்நாடு மருத்துவம், பல் மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகள் சட்ட மசோதா’’ ஆகியவை குரல்வாக்கெடுப்பு மூலம் தமி ழக சட்டப்பேரவையில் கடந்த ஒன்றாம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரும் கோப்புகளை மத்திய அரசு மூலம் குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்  டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மாநிலங்களின் நலனை பாதிக்கும் வகையில் உள்ளது. நீர் தேர்வினால் கிராமப் புற மாணவர்கள் பாதிக்கப்படுவர். தமிழக சட்ட சபையில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வாங்கி தர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.