தேசிய காவல் துறை குதிரையேற்ற போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

90 0

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 41-வது அகில இந்திய காவல் துறைகுதிரையேற்ற போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழக காவல் துறை வீரர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய பிரதேச மாநிலம், டெக்கான்பூரில் உள்ள பிஎஸ்எப் அகாடமியில் கடந்த நவ.14 முதல் 26-ம் தேதி வரை 41-வது அகிலஇந்திய காவல் துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல் துறைக்கான போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மத்திய ஆயுதப் படை மற்றும் மாநில காவல் துறையைச் சேர்ந்த 18 குழுக்கள் பங்கேற்றன.

இப்போட்டிகளில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த முதுநிலை காவலர் மணிகண்டன், 2 தங்கப்பதக்கங்கள், லாலா பி கே டெய், சிரோகி சேலன்ஜ் கோப்பைகளையும், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றார். உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை காவலர்கள் மணிகண்டன், மகேஷ்வரன், சுகன்யா ஆகியோர் தங்கப் பதக்கமும், முதுநிலை பெண் காவலர் சுகன்யா தங்கப் பதக்கத்தையும், டிஜிபி ஹரியாணா கோப்பையும், குதிரை பராமரிப்பாளர்கள் தமிழ்மணி, ராஜகணபதி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

 

சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வரலாற்றில் முதன்முறையாக 2018-ம் ஆண்டு குதிரையேற்ற அணி உருவாக்கப்பட்டது. அகில இந்திய காவல் துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழ்நாடு காவல் துறை குதிரையேற்ற அணி பங்கேற்பதுஇது 3-வது முறையாகும். தமிழககாவல் துறை அணி பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்றுஒட்டு மொத்த பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், இப்போட்டிகளில்பதக்கங்கள் வென்ற காவல் துறையினர் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.5 லட்சம், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.3 லட்சம், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2லட்சம் தமிழக அரசின் சார்பில் பரிசுத் தொகையாக விரைவில் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில், உள்துறை செயலர்பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் பயிற்சிக் கல்லூரி தலைவர் அருண், திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர்தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.