காலி, அக்மீமன பிரதேசத்தில் இசைக் குழு நடத்துபவர்களின் வீடு ஒன்றுக்கு சிலர் தீ வைத்துள்ளதாகவும் இதன் காரணமாக வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ரியல் பேக் பேண்ட் என்ற குறித்த இசைக் குழுவினர் வீடொன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டு அங்கு இசை பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இசைக்கருவிகளின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

