வீதியில் தவறி விழுந்த தாலிக்கொடி! மீண்டும் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சி!

296 0

முல்லைத்தீவில் இளம் தம்பதியினால் தவறவிடப்பட்ட தாலிக்கொடி மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றுக்கு சென்ற பெண்ணின் தாலிக்கொடி கழுத்திலிருந்து தவறி வீழ்ந்துள்ளது.

இந்நிலையைில் குறித்த பேக்கரியின் உரிமையாளரினால் மீட்கப்பட்ட தாலிக்கொடியை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு வணிகர் சங்க தலைவர் நவநீதனுக்கு, பேக்கரி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வீதியில் தவறி விழுந்த தாலிக்கொடி - முல்லைத்தீவில் நடந்த நெகிழ்ச்சி செயல் | Gold Price In Sri Lanka Today New Price

தாலிக்கொடியின் உரிமையாளர் அதனை தேடி வரும் வரையில் மிகவும் பத்திரமாக அதனை வைத்திருக்குமாறு உரிமையாளரிடம் நவநீதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாலிக்கொடியினை தவற விட்டவர்கள் உரிய பேக்கரிக்கு வந்து நிலைமை தெளிவுபடுத்தியுள்ளனர். இதனையடுத்து உரியவர்களிடம் தாலிக்கொடி கையளிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

வீதியில் தவறி விழுந்த தாலிக்கொடி - முல்லைத்தீவில் நடந்த நெகிழ்ச்சி செயல் | Gold Price In Sri Lanka Today New Price

பெருந்தொகை ரூபா பெறுமதியான தாலிக்கொடி தமக்கு மீட்டும் கிடைத்தமை தொடர்பில் பேக்கரி உரிமையாளருக்கும் வர்த்தக சங்கத்தினருக்கும் தம்பதி நன்றி தெரிவித்துள்ளனர்.