பிரிகேடியர் தீபன் அவர்களின் தந்தை, கந்தையா வேலாயுதப்பிள்ளை அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம், தென்மராட்சி – வரணியைப் பிறப்பிடமாகவும் கண்டாவளை, வரணி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட, கந்தையா வேலாயுதபிள்ளை கடந்த 9ஆம் திகதி காலமானார்.
இவர், மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் லெப். கேணல் கில்மன் ஆகியோரின் தந்தையாவார். இந்த நிலையில், இன்றைய தினம் அவரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.
இவரது தகனக் கிரியை, வரணி, குடமியன் இந்து மயானத்தில் இன்று இடம்பெற்றது.

