தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நுவரெலியாவிலும் பாதிப்பு

139 0

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை 4 மணி முதல் இன்று திங்கட்கிழமை (12) நள்ளிரவு 12 மணி வரை தபால் நிலைய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நுவரெலியா பிரதான தபால் அலுவலகம் மற்றும்  நானுஓயா தபால் அலுவலகங்கள் செயலிழந்து காணப்படுகின்றது.

 

எனினும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு  காரணமாக தபால் சேவை மற்றும் அலுவலக கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலையும், பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும்  ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.