போதைப்பொருளுக்கு எதிராக தீவக இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு பிரிவாக, யாழ். தீவக மறைக்கோட்டத்துக்குட்டபட்ட பகுதிகளை சேர்நத இளைஞர்கள் வேலனை பிரதேசத்தில் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
இப் போராட்டத்தில் மண்டைதீவு, சாட்டி, நாரந்தனை, கரம்பொன், புங்குடுதீவு ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
ஒரு பிரிவினர் மண்கும்பான் சந்தியிலிருந்தும், இன்னொரு பிரிவினர் வங்கலாவடி சந்தியிலிருந்தும் போராட்டத்தை ஆரம்பித்து சாட்டி திருத்தலத்தை நோக்கி பதாதைகளை ஏந்தியவாரு பவனியாக வந்து போதைப்பொருளுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்பணி நரேஸ் அடிகளார் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார், தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி டேவிட் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொலிசார், உத்தியோகத்தர்கள் நலன் விரும்பிகள், இளையோர் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.


