பலத்த காற்றால் திருகோணமலையில் வீடுகள் சேதம்

219 0

சீரற்ற காலநிலை காரணமாக வீசிய பலத்த காற்றினால் திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலகப்பகுதியில் பாரிய பழமை வாய்ந்த மரம் ஒன்று வீழ்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (09) காலை இடம் பெற்றுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளும் இப் பலத்த காற்றால் சேதமாக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டுக்கூரை, தகரம் உள்ளிட்ட வாழை, பப்பாசி உள்ளிட்ட மரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு உரிய நஷ்ட ஈட்டினை உரிய அதிகாரிகள் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.